மாவட்ட செய்திகள்

அந்தியூர் வாரச்சந்தையில் கொங்கு காளைமாடு ஜோடி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை + "||" + livestock market

அந்தியூர் வாரச்சந்தையில் கொங்கு காளைமாடு ஜோடி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை

அந்தியூர் வாரச்சந்தையில் கொங்கு காளைமாடு ஜோடி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனை
அந்தியூர் வாரச்சந்தையில் கொங்கு காளைமாடு ஜோடி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் வாரச்சந்தையில் கொங்கு காளைமாடு ஜோடி ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற்பனையானது. 
கால்நடை சந்தை
அந்தியூரில் நேற்று கால்நடை சந்தை நடைபெற்றது. ஈரோடு, மேட்டூர், எடப்பாடி, கொங்கணாபுரம், பர்கூர், வேலம்பட்டி, கர்காகண்டி, ராமாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தன. இதில் கொங்கு காளைமாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.60 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் விற்பனையானது. காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்த பட்ச விலையாக ரூ.70 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
ஜெர்சி பசு
 சிந்து பசு மாடு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், ஜெர்சி பசு மாடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரையும், நாட்டு பசுமாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும் விற்றது. எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல்  ரூ.65 ஆயிரம் வரையும், பர்கூர் இன காளைமாடு ஜோடி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், பர்கூர் இன பசுமாடு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரத்துக்கும் விற்றது.
கன்றுக்குட்டிகள் குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்துக்கும், அதிக பட்ச விலையாக ரூ.10 ஆயிரத்துக்கும் விற்பனையானது. ஈரோடு, மேட்டுப்பாளையம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச்சென்றார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை ஆனது.
2. அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
3. ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தம்
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடுகள் விற்பனை மந்தமானது.
4. சீனாபுரம் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
சீனாபுரம் சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.
5. கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக கருங்கல்பாளையம் சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது
கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது.