மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில்புகையிலை பொருட்கள் விற்ற 2பேர் கைது + "||" + in kovilpatti, 2 arrested for selling tobacco products

கோவில்பட்டியில்புகையிலை பொருட்கள் விற்ற 2பேர் கைது

கோவில்பட்டியில்புகையிலை பொருட்கள் விற்ற 2பேர் கைது
கோவில்பட்டியில், புகையிலை பொருட்கள் விற்ற2 பேர் கைது செய்யப்பட்டனர்.
 கோவில்பட்டி:
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள கடையில் சோதனை நடத்தினர்.  அங்கு இருந்த ரூ.10 ஆயிரத்து 500 மதிப்பிலான புகையிலை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூப்பன்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ராஜேந்திரன் (வயது 55) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, வடக்கு புதுகிராமம் 1-ஆவது தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனையில் ஈடுபட முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த செல்லக்கனி மகன் தங்கமாரியப்பனை (வயது 53) கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.11 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருளை பறிமுதல் செய்தனர்.