பூந்தமல்லி அருகே, ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கைகெடிகாரங்கள் திருட்டு
பூந்தமல்லி அருகே வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கைகெடிகாரங்கள் திருட்டு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,
மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ஷபான் (வயது 71). இவரது வீட்டில் கடந்த சில மாதங்களாக பெயிண்ட் அடிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டு வந்தனர். அந்த வேலை முடிந்த பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை சரி பார்த்தார். அதில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கைகெடிகாரங்கள், பாஸ்போர்ட், ஏ.டி.எம். கார்டு ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார், ஷபான் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (44), மணிவண்ணன் (43), பிரவீன்குமார் (33), சந்தோஷ்குமார் (38) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் கொரட்டூரை அடுத்த மதனகுப்பம் கலெக்டர் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், புழல் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story