திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றி
திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணந் மீண்டும் வெற்றிபெற்றார்.
தூத்துக்குடி:
திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றி பெற்றார்.
திருச்செந்தூர் தொகுதி
திருச்செந்தூர் சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 20 வாக்காளர்கள் உள்ளனர். இதில் கடந்த 6-ந் தேதி நடந்த தேர்தலில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 482 வாக்குகள் பதிவானது.
இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மு.ராதாகிருஷ்ணன், தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அ.ம.மு.க. சார்பில் எஸ்.வடமலை பாண்டியன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ச.ம.க. சார்பில் மு.ஜெயந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் செ.குளோரியான் உள்பட 15 பேர் போட்டியிட்டனர். எனினும் அ.தி.மு.க., தி.மு.க. இடையே தான் நேரிடை போட்டி இருந்தது.
அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி
திருச்செந்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தூத்துக்குடியில் நேற்று நடந்தது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பப்பட்டன.
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கணிசமான வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அவருக்கு அடுத்தபடியாக மு.ராதாகிருஷ்ணன் இருந்தார்.
முடிவில், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 88,274 வாக்குகளும், மு.ராதாகிருஷ்ணன் 63,011 வாக்குகளும் பெற்றனர். அதாவது 25,263 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றார்.
வாக்கு விவரம்
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
(தி.மு.க.)- 88,274
மு.ராதாகிருஷ்ணன்
(அ.தி.மு.க.)- 63,011
செ.குளோரியான்
(நாம் தமிழர் கட்சி)- 15,063
எஸ்.வடமலை பாண்டியன் (அ.ம.மு.க.)- 3,766
மு.ஜெயந்தி (ச.ம.க.)- 1,965
சே.ரூஸ்வெல்ட்
(நாம் இந்தியர் கட்சி)- 239
சா.பாஸ்கர் (சுயே)- 196
செ.பொன்ரத்னசெல்வன்
(சுயே)- 195
சே.செந்தில்குமார்
(சுயே)- 177
பி.எஸ்.ஜே.சேகு அப்துல்காதர் (சுயே)- 136
க.கென்னடி பாபு (வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளர் கட்சி)- 129
சு.ஆறுமுகம் (சுயே)- 108
ரா.கல்யாணசுந்தரம்
(சுயே)- 92
கு.பெருமாள் (சுயே)- 71
இசக்கிமுத்து (சுயே)- 60
நோட்டா - 1054.
Related Tags :
Next Story