விளாத்திகுளம் தொகுதியை தி.மு.க.மீண்டும் கைப்பற்றியது


விளாத்திகுளம் தொகுதியை தி.மு.க.மீண்டும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 2 May 2021 10:59 PM IST (Updated: 2 May 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் தொகுதியை தி.மு.க. மீண்டும் கைப்பற்றி உள்ளது.

தூத்துக்குடி:
விளாத்திகுளம் தொகுதியை தி.மு.க. கைப்பற்றியது. அந்த கட்சி வேட்பாளர் மார்க்கண்டேயன் 38 ஆயிரத்து 549 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் கடந்த 6-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 16 ஆயிரத்து 452 பேரில், 1 லட்சத்து 66 ஆயிரத்து 133 பேர் வாக்களித்தனர். 
விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போ.சின்னப்பன் எம்.எல்.ஏ., தி.மு.க. சார்பில் வ.மார்க்கண்டேயன், அ.ம.மு.க. சார்பில் கா.சீனிச்செல்வி, மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ச.ம.க. சார்பில் சே.வில்சன், நாம் தமிழர் கட்சி சார்பில் பாலாஜி உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மார்க்கண்டேயன் வெற்றி
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு 562 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளருக்கு 1,218 வாக்குகளும் கிடைத்தன. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் மார்க்கண்டேயன் முன்னிலையில் இருந்தார். அவர் ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார். முடிவில், தி.மு.க. வேட்பாளர் மார்க்கண்டேயன் 90,348 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சின்னப்பன் 51,799 வாக்குகளும் பெற்றனர். அதாவது 38 ஆயிரத்து 549 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. அபார வெற்றி பெற்று விளாத்திகுளம் தொகுதியை அ.தி.மு.க.விடம் இருந்து கைப்பற்றியது.
பின்னர் வெற்றி பெற்ற மார்க்கண்டேயனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அபுல் காசிம் சான்றிதழை வழங்கினார்.
வாக்கு விவரம்
விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
வ.மார்க்கண்டேயன் (தி.மு.க.) - 90,348 
போ.சின்னப்பன் (அ.தி.மு.க.)- 51,799
பாலாஜி (நாம் தமிழர் கட்சி) - 11,828
கா.சீனிச்செல்வி (அ.ம.மு.க.)- 6,657
சே.வில்சன் (ச.ம.க.)- 1,520
செ.முத்துக்குமார் (புதிய தமிழகம்)- 1,055
கருப்பசாமி (நாம் இந்தியர் கட்சி)- 613
மாணிக்கராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி)- 487
மாரிமுத்து (தென் இந்திய பார்வர்டு பிளாக்)- 404
முருகானந்தம் (சுயே)- 348
செல்லத்துரை (சுயே.)- 312
ஆறுமுகம் (சுயே.) - 272
ஆறுமுகபெருமாள் (சுயே.)- 268
காந்தி மள்ளர் (பகுஜன் திராவிட கட்சி) - 121
ராஜாமணி (சுயே.)- 101
நோட்டா -  1036.

Next Story