பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றி உள்ளது.
தர்மபுரி:
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றி உள்ளது.
மீண்டும் கைப்பற்றியது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கோவிந்தசாமி 1 லட்சத்து 14 ஆயிரத்து 507 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எம்.பிரபு ராஜசேகரை விட 36 ஆயிரத்து 943 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எம்.பிரபு ராஜசேகர் 77 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் 15 ஆயிரத்து 863 வாக்குகள் பெற்றுள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்ட பிறகு 2011-ம் ஆண்டு முதன்முறையாக இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பி.பழனியப்பன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அவரே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதை தொடர்ந்து பி.பழனியப்பன் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கோவிந்தசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து தற்போது நடந்த தேர்தலிலும் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அ.தி.மு.க. இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றி உள்ளது.
வாக்குகள் விவரம்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
மொத்த வாக்குகள்-2,65,074
பதிவான வாக்குகள்-2,20,994
ஏ.கோவிந்தசாமி (அ.தி.மு.க.) -1,14,507
டாக்டர்.எம்.பிரபு ராஜசேகர் (தி.மு.க.) -77,564
பி.பழனியப்பன் (அ.ம.மு.க.) -15,863
சீனிவாசன் (மக்கள் நீதி மய்யம்) -1,729
ஆர்.ரமேஷ் (நாம் தமிழர் கட்சி) -7,573
கே.கோபி (பகுஜன் சமாஜ் கட்சி) -625
நோட்டா வாக்குகள்-1,338
இந்த தொகுதியில் பெறப்பட்ட தபால் வாக்குகளில் 282 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நசீர் இக்பால் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
Related Tags :
Next Story