பெண் ஊழியரை தாக்கி நகை பறிப்பு


பெண் ஊழியரை தாக்கி நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 May 2021 12:50 AM IST (Updated: 3 May 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

பெண் ஊழியரை தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட முறையூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி வினோதினி (வயது 30). இவர் திருப்பத்தூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் லேப்-டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று முறையூரில் இருந்து மொபட்டில் மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருந்தார். மருதிபட்டி அருகே கோயிலாப்பட்டி விலக்கு அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் மொபட்டில் மோதினர். இதில் தடுமாறி கீழே விழுந்த வினோதினி அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு ஆசாமி பறித்து கொண்டு தப்பி ஓடினார்.
உடனே வினோதினி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். மற்றொருவரை அக்கம், பக்கத்தினர் சுற்றி வளைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்த போது, பிடிபட்டவர் ராமநாதபுரம் மாவட்டம் வாழாந்துறைைய சேர்ந்த சேதுபதி(36) என்றும், தப்பி ஓடியவர் சிங்கம்புணரி கக்கன்ஜி நகரை சேர்ந்த ராஜபாண்டி என்றும் வந்தது. சேதுபதியை கைது செய்தனர்.

Next Story