தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கயல்விழி வெற்றி
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கயல்விழி வெற்றி பெற்றார். தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் தோல்வியை தழுவினார்.
திருப்பூர்
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கயல்விழி வெற்றி பெற்றார். தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் தோல்வியை தழுவினார்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதி
தாராபுரம் (தனி)சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் - 2,58,547
பதிவானவை -1,94,505
இந்த தொகுதியில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தி.மு.க. சார்பில் என்.கயல்விழியும், பா.ஜனதா சார்பில் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகனும் போட்டியிட்டனர். பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் இருவரும் மாறிமாறி முன்னிலையில் இருந்தனர்.
மொத்தம் 25 சுற்றுகள் எண்ணப்பட்டன.
அதில் இறுதியில் என். கயல்விழி 89,986 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரான தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் 88,593 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
அதே நேரம் கடைசியில் வாக்குப் பதிவு எந்திர கோளாறால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:-
1. சி.கலாராணி
(அ.ம.மு.க.)-1172
2. ஏ.சார்லி (மக்கள் நீதி மய்யம்)-2130
3. கே.ரஞ்சிதா (நாம் தமிழர் கட்சி)-6753
4. எஸ்.ரங்கசாமி (சுயே)-640
5. வி.சிதம்பரம் (சுயே)-126
6. ஏ.முனியப்பன்
(சுயே)-220
7. எஸ்.ஆனந்தி (சுயே)-157
8. கே.கயல்விழி (சுயே)-892
9. பி. கயல்விழி (சுயே)-202
10. ஏ.கார்த்திகேயன்
(சுயே)-158
11. வி.செல்வராஜ்
(சுயே)-233
12. ஏ.முருகன் (சுயே)-826
நோட்டா-1903
Related Tags :
Next Story