அவினாசி சட்டமன்ற தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது


அவினாசி சட்டமன்ற தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 3 May 2021 2:36 AM IST (Updated: 3 May 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி சட்டமன்ற தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு. வேட்பாளர் ப.தனபால் 1,17,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருப்பூர்
அவினாசி சட்டமன்ற தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. கைப்பற்றியது. அ.தி.மு. வேட்பாளர் ப.தனபால் 1,17,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க. வேட்பாளர்
அவினாசி சட்டமன்ற தொகுதியில் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தவகையில் நேற்று வாக்கு எண்ணிக்கை 29 சுற்று நடைபெற்றது. 
மொத்த வாக்காளர்கள்: 2,80,551 
பதிவானவை: 2,10,929  இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ப.தனபால் 1,17,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மீண்டும் அவினாசி தொகுதி அ.தி.மு.க. வசம் சென்றது. வாக்கு வித்தியாசம் 50,842. இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆதிதமிழர் பேரவை  வேட்பாளர் அதியமான்ராஜூ -66,442 வாக்குகள் பெற்றார்.
மற்ற வேட்பாளர்கள் 
மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
1. ஷோபா  
(நாம்தமிழர்கட்சி)- 13,256
2. ஏ.வெங்கடேஷ்வரன் 
(மக்கள்நீதிமய்யம் )-8,379
3. கே.மீரா 
(தே.மு.தி.க) - 2,577
4. பி.துரைசாமி (சுயே)- 833
5. பி.ரங்கசாமி (சுயே)-520
6. ஆர்.முருகேசன்
 (சுயே)-379
7. டி.சகுந்தலா (சுயே)-179
8. பி.ஆறுமுகம் (சுயே)- 173
9. அண்ணாமலை 
(சுயே)- 154
10. கே.சுப்ரமணி (சுயே)-139
 நோட்டா- 2,372

Next Story