பட்டாசு வெடிக்க தடை:வெற்றியை கொண்டாட முடியாமல் தொண்டர்கள் தவிப்பு


பட்டாசு வெடிக்க தடை:வெற்றியை கொண்டாட முடியாமல் தொண்டர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 2 May 2021 9:37 PM GMT (Updated: 2 May 2021 9:37 PM GMT)

முழு ஊரடங்கு மற்றும் பட்டாசு வெடிக்க தடை காரணமாக வெற்றியை கொண்டாட முடியாமல் தொண்டர்கள் தவித்தனர்

நொய்யல்
கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம(தனி), அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் கரூர் தொகுதி அரசியல் பார்வையாளர்களால் உற்று நோக்கப்பட்ட தொகுதி ஆகும். காரணம் இங்கு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜியும், இந்நாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் களத்தில் இருந்தனர். கடந்த மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றன. பின்னர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு கரூர் அருகே தளவாப்பாளையத்தில் உள்ள எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன.
நேற்று காலை வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் சுற்று வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.  கரூர் தொகுதியில் ஒவ்வொரு சுற்றாக ஓட்டு எண்ணி அறிவிக்கப்பட்டதில் செந்தில் பாலாஜியும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் மாறி, மாறி முன்னிலை பெற்றனர். இதேபோல அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜனதா சார்பில் களம் இறக்கப்பட்ட அண்ணாமலையும், இளங்கோவும் மாறி, மாறி முன்னிலை பெற்றனர். அடுத்தடுத்த சுற்றுகளில் இளங்கோ முன்னிலை பெற்றனர். இதேபோல குளித்தலை(மாணிக்கம்) மற்றும் கிருஷ்ணராயபுரம்(சிவகாசுந்தரி) ஆகியோர் முன்னிலை பெற்றனர். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் முழு ஊரடங்காகும். இதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.  வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் பட்டாசு வெடித்து எவ்வித கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதனால் வீடுகளில் முடங்கிய தொண்டர்கள் தி.மு.க. ஆட்சியை பிடித்தும், கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலை பெற்றும் அந்த வெற்றியை கொண்டாட முடியாமல் தவித்தனர்.

Next Story