மாவட்ட செய்திகள்

தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம் + "||" + In the corona treatment unit Fire Accident Prevention Demonstration

தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம்

தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம்
கொரோனா சிகிச்சை பிரிவில் தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம் நடைபெற்றது.
பெரம்பலூர்,

தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டால், அதை தடுத்து அங்கிருப்பவர்களை மீட்பது எப்படி என்ற நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர் சார்பில் கருத்தரங்கம் மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் பணியாளர்கள், கொரோனா சிகிச்சை அளிக்கும் வார்டுகளில் மின்கசிவு, ஆக்சிஜன் கசிவு மூலமாக தீ விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் இருந்து நோயாளிகளை உடனடியாக காப்பாற்றுவது பற்றியும், ஆக்சிஜன் சப்ளை குழாய்களில் கசிவு ஏற்பட்டிருந்தால் தீயினால் உயிர் இழப்பவர்களை விட கடும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்பவர்களே அதிகம், எனவே அனைத்து அறைகளிலும் புகை கண்டுபிடிப்பான்களை பொருத்தி உடனடியாக கசிவை கட்டுப்படுத்த வேண்டும், என்று தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து
சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் எந்திரங்கள் எரிந்து நாசமாயின
2. ஆப்கானிஸ்தானில் லாரி தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர்.
3. குஜராத் தீ விபத்து: முதல் மந்திரி தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு; பிரதமர் மோடி இரங்கல்
குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி அறிவித்து உள்ளார்.
4. குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 நோயாளிகள் உள்பட 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5. குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து; 12 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.