தேவையூர் ஏரியில் மீன் பிடித் திருவிழா


தேவையூர் ஏரியில் மீன் பிடித் திருவிழா
x
தினத்தந்தி 5 May 2021 7:30 PM GMT (Updated: 5 May 2021 7:30 PM GMT)

தேவையூர் ஏரியில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.

மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள தேவையூர் ஏரியில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 10 மணி அளவில் ஏராளமான பொதுமக்கள் ஏரிக் கரையில் குவிந்தனர். பின்னர் அவர்கள் ஏரிக்குள் கும்பல், கும்பலாக இறங்கி மீன்பிடி வலைகளை கொண்டும், வேட்டி, சேலைகளை விரித்தும் மீன் பிடித்தனர். பின்னர் கிடைத்த மீன்களுடன் வீட்டுக்கு சென்றனர். கொரோனா வேகமாக பரவி வரும் தற்போதைய நிலையில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 


Next Story