ஆஸ்பத்திரிகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க கண்காணிப்பு குழு
ஆஸ்பத்திரிகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க கண்காணிப்பு குழு
கோவை
கோவை மாவட்டத்தில் ஆஸ்பத்திரிகளுக்கு தட்டு்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க கண்காணிப்பு குழு அமைத்து கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
கண்காணிப்பு குழு
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினமும் 2 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது. கோவை ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே வெளி மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவில், சுகாதாரத்துறை இணை இயக்குனர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், மாநகர போலீஸ் சட்டம் -ஒழுங்கு உதவி கமிஷனர், மண்டல போக்குவரத்து அதிகாரி, கோவை வடக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
நடவடிக்கை எடுப்பார்கள்
அவர்கள், கோவை ஆஸ்பத்திரிகளில் உள்ள மொத்த ஆக்சிஜன் படுக்கை, அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, தினமும் தேவைப்படும் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை கணக்கீடு செய்வார்கள்.
அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரிகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story