வடமாநில கொள்ளையன் கைது


வடமாநில கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 6 May 2021 5:12 PM GMT (Updated: 6 May 2021 5:12 PM GMT)

வடமாநில கொள்ளையன் கைது

கோவை

கோவை - திருச்சி ரோட்டில் உள்ள ஒரு அரிசி கடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.13 லட்சம் திருட்டு போனது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இது போல் திருச்சி ரோட்டில் உள்ள சில கடைகளில் திருட்டு நடந்தது. அங்கு பதிவான கைரேகைக ளும், அரிசி கடையில் பதிவான கைரேகையும் ஒத்துப்போனது.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். 

இதில் திருட்டில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் ஜெயின் (வயது36) என்பதும், அவர் கோவை, மதுரை, சேலம், தேவகோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது.

இதையடுத்து மதுரை தெற்கு வாசல் பகுதியில் பதுங்கி இருந்த அசோக்குமார் ஜெயினை போலீசார் கைது செய்தனர். திருடும் பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்வதும், அந்த பணம் தீர்ந்து போனதும் மீண்டும் திருடுவதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரியவந்தது. 


Next Story