முதியவர் மர்ம சாவு


முதியவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 6 May 2021 11:05 PM IST (Updated: 6 May 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

முதியவர் மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.எஸ்.மங்கலம், 
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா படவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது57).இவர் சோழந்தூரில் உள்ள தனியார் வங்கியில் பாதுகாவலராக பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஜெயராஜ் காலையில் ஆடு மேய்த்து விட்டு வருவதாக ஊர் அருகே உள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளார்.மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் ஆடுகள் மட்டும் வீட்டுக்கு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் பாலமுருகன் தந்தையை தேடி சென்றபோது பொன்மாரி கண்மாய்க்கரையில் மர்மமான முறையில் மின்கம்பத்தில் ஜெயராஜ் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
1 More update

Next Story