வாலாஜா பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு


வாலாஜா பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 May 2021 5:37 PM GMT (Updated: 2021-05-06T23:12:34+05:30)

வாலாஜா பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு.

ராணிப்பேட்டை,

தமிழக அரசு மாநிலம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று முதல் ஊரடங்கு உத்தரவை சில கட்டுப்பாடுகளுடன் பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. 

மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாலாஜாவில் விதிகளை மீறி இயங்கிவந்த தனியார் ஆஸ்பத்திரி, சமூக இடைவெளியை பின்பற்றாத தனியார் வாகனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாலாஜா பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான கடம்பராயன் தெருவை பார்வையிட்டனர். அப்போது மாவட்ட கலெக்டர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story