லாரி மோதி விவசாயி பலி


லாரி மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 6 May 2021 7:06 PM GMT (Updated: 2021-05-07T00:36:04+05:30)

நரிக்குடி அருகே லாரி மோதி விவசாயி பலியானார்.

காரியாபட்டி, 
நரிக்குடி அருகே உள்ள சீனிமடை கிராமத்தை சேர்ந்தவர் பெத்தனன் (வயது 62). விவசாயி. இவரும் அதே ஊரை சேர்ந்த தேவேந்திரனும் (50), தோட்டத்திற்கு நேற்று  தண்ணீர் பாய்ச்சிவிட்டு  சாலையின் ஓரத்தில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி பெத்தனன் மீது ஏறி இறங்கியது. இதில் பெத்தனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story