விபத்தில் 2 என்ஜினீயர்கள் பலி


விபத்தில் 2 என்ஜினீயர்கள் பலி
x
தினத்தந்தி 6 May 2021 7:34 PM GMT (Updated: 6 May 2021 7:34 PM GMT)

புதுக்கடை அருகே வேன்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 என்ஜினீயர்கள் பரிதாபமாக இறந்தனர்.

புதுக்கடை, 
புதுக்கடை அருகே வேன்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 என்ஜினீயர்கள் பரிதாபமாக இறந்தனர். 
இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
வெல்டிங்கடை உரிமையாளர்கள்
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பைங்குளம் பானகுடிவிளையை சர்ந்த தங்கப்பன் மகன் சாஜன் (வயது23). அதே பகுதியை சேர்ந்த டேவிட் மகன் ராஜேஷ் (24). இருவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகள். நண்பர்களான இருவரும் கூட்டாலுமூடு பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தனர்.
நேற்று மாலை இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பைங்குளம் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சாஜன் ஓட்டி சென்றார். ராஜேஷ் பின்னால் அமர்ந்திருந்தார். தாணக்குடிவிளை பகுதியில் சென்ற போது எதிரே ஒரு சுற்றுலா வேன் பயணிகள் யாரும் இல்லாமல் வந்தது. எதிர்பாராத விதமாக வேனும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
பரிதாப சாவு
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் சாஜனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்ததார். அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் படுகாயம் அடைந்த ராஜேசை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேசும் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து புதுக்கடை இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் தூத்தூரை சேர்ந்த ஹெல்வித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சோகம்
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உறவினர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்பவர் ெநஞ்சை உருக்கும் வகையில் இருந்தது. வேன், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 என்ஜினீயர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story