நல்லூர் பகுதியில் 47 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்
நல்லூர் பகுதியில் 47 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்
நல்லூர்
நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ந.சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான தனிப் படையினர் நேற்று முன்தினம் காசிபாளையம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காரில் கடத்தி வந்த தடைசெய்யப்பட்ட ரூ.1லட்சம் மதிப்புள்ள 47 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் புகையிலைப்பொருட்களை கொண்டு வந்த ஊத்துக்குளி, கஸ்தூரிப்பாளையம் அஞ்சல் கரைபாளையத்தை சேர்ந்த குமார் (வயது 35) என்பவரும், சிட்கோ செந்தில்நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (40) என்பவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும் புகையிலை பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story