கட்டிடத்தொழிலாளி மர்ம சாவில் திருப்பம்: கள்ளக்காதலுக்கு இடையூறு செய்ததால் கழுத்தை நெரித்து கொலை


கட்டிடத்தொழிலாளி மர்ம சாவில் திருப்பம்: கள்ளக்காதலுக்கு இடையூறு செய்ததால் கழுத்தை நெரித்து கொலை
x
தினத்தந்தி 7 May 2021 1:26 AM GMT (Updated: 2021-05-07T06:56:47+05:30)

கட்டிடத்தொழிலாளி மர்ம சாவில் திருப்பம்: கள்ளக்காதலுக்கு இடையூறு செய்ததால் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலம்.

திரு.வி.க. நகர், 

சென்னை அண்ணாநகர், சாந்தி காலனியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அங்கு வேலை செய்து வந்த கட்டிடத்தொழிலாளியான திருவண்ணாமலையைச் சேர்ந்த குமார் என்ற விஸ்வநாதன் (வயது 35) உடலில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருமங்கலம் போலீசார், இது தொடர்பாக அந்த கட்டுமான பணியின் மேற்பார்வையாளர் ஜிம் ஜெரால்டு (40), கட்டிடத் தொழிலாளர்களான திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை சேர்ந்த ராஜா (28), திண்டிவனம், ஆசுர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் (30), அவருடைய மனைவி பூங்காவனம் (29), ஏழுமலை (36), சேகர் (41) ஆகிய 6 பேரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் ராஜாவுக்கும், பூங்காவனத்துக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் குமாரும் பூங்காவனத்துக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாவும், பூங்காவனமும் சேர்ந்து தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குமாரை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் ராஜா, பூங்காவனம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றவர்களை விடுவித்தனர்.


Next Story