சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர்
50 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர்
சேலம்:
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர் மட்டும் பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்களே பணியாற்றினர். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று அங்கு 50 சதவீத பணியாளர்களே வந்து தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அரசு அலுவலகங்களுக்கு வந்த ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிேசாதனை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் முககவசம் அணிந்து வருகிறார்களா? என அதிகாரிகள் கண்காணித்தனர்.
இதேபோல் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் எண்ணிக்கையில் ஊழியர்கள் வந்து பணியாற்றினர். மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்களே வேலைக்கு வருகின்றனர்.
Related Tags :
Next Story