மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகம் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளி போலீசில் சரண் + "||" + False girlfriend Strangled to death The worker surrendered to the police

நடத்தையில் சந்தேகம் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளி போலீசில் சரண்

நடத்தையில் சந்தேகம் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளி போலீசில் சரண்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக்கொலை செய்த கூலித்தொழிலாளி, போலீசில் சரண் அடைந்தார்.
திரு.வி.க. நகர், 

சென்னை அம்பத்தூரை அடுத்த மண்ணூர்பேட்டை காமராஜ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). கூலி தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.

இந்தநிலையில் அதே பகுதியில் வசிக்கும் மணிமாலா(40) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

சுரேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து கள்ளக்காதலி மணிமாலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுரேஷ், கள்ளக்காதலி மணிமாலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் நேற்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் நடந்த விவரங்களை கூறி சரண் அடைந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று மணிமாலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சுரேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.