சூதாடிய 6 பேர் கைது


சூதாடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2021 4:36 PM GMT (Updated: 2021-05-07T22:06:28+05:30)

சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பாம்பூரணி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் சிக்கினர். விசாரணையில் ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பாம்பூரணியை சேர்ந்த முத்து கிருஷ்ணன் (வயது51), சின்னக்கடை சர்புதீன் (65), பாரதிநகர் அஜ்மல்கான் (42), துரைராஜ் சத்திரதெரு முகமது (41), பாசிப்பட்டறை தெரு அப்பாஸ்அலி (64), செல்லப்பெருமாள் கோவில் தெரு செய்யது ஆரிப் (66) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய ரூ.18 ஆயிரத்து 200-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்

Next Story