கோவில் பின்புறம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு


கோவில் பின்புறம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 7 May 2021 6:53 PM GMT (Updated: 2021-05-08T00:23:46+05:30)

கோவில் பின்புறம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது

பல்லடம், மே.8-
 பல்லடம் அருகேயுள்ள, கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மிகவும் புகழ்பெற்ற உலகேஸ்வரர், உண்ணாமலை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் சிலர் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர். இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை தூய்மைப்பணியாளர்கள் அகற்றாததால், குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story