கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை
கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அக்னி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இந்தநிலையில் நேற்று லாலாபேட்டை பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிபட்டி, புணவசிபட்டி, மேட்டு மகாதானபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம் ஆகிய பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் மற்றும் வீதிகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. இந்த மழையால் பூமி குளிர்ந்து இதமான காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story