ஒரேநாளில் 379 பேருக்கு கொரோனா


ஒரேநாளில் 379 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 May 2021 8:20 PM GMT (Updated: 7 May 2021 8:20 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். 
5 பேர் பலி 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 21,907 ஆக உயர்ந்துள்ளது. 19,883 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,686 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும ்தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
நோய் பாதிப்புக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 254ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
மருத்துவ பரிசோதனை
 இதுவரை மாவட்டத்தில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 563 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 336 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 310 டோஸ் தடுப்பூசி மருந்தும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4,240 டோஸ் தடுப்பூசி மருந்தும், அரசு கிடங்கில் 8,320 டோஸ் தடுப்பூசி மருந்தும் ஆக மொத்தம் 12 ஆயிரத்து 870 டோஸ் தடுப்பூசிமருந்தும் இருப்பில் உள்ளது.
அபராதம் 
 மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 677 கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் உள்ள நிலையில் 199 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள 175 படுக்கைகளில் 112 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக சுகாதாரத்துறையினர் இதுவரை 3,326 பேரிடமிருந்து ரூ.6 லட்சத்து 83 ஆயிரத்து 400 அபராதம் வசூலித்துள்ளனர். இதேபோன்று வருவாய்த்துறையினர் 973 பேரிடம் இருந்து ரூ. 2 லட்சத்து 48 ஆயிரத்து 300 அபராதம் வசூலித்து உள்ளனர். உள்ளாட்சித்துறையினர் 1454 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்து 500 அபராதம் வசூலித்து உள்ளார். 
போலீசார் 26,293 ேபரிடம் இருந்து ரூ. 55 லட்சத்து 61 ஆயிரத்து 500 அபராதமாக வசூலித்துள்ளனர்.  மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரத்து 16 பேரிடமிருந்து ரூ.66 லட்சத்து 83 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.60 லட்சத்து 42 ஆயிரத்து 200 கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்புவிதி முறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 முரண்பாடு
மாநில அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் மாவட்டத்தில் 279 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆனால் மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இரண்டு பட்டியல்கள் மூலம் மாவட்டத்தில் 379 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த முரண்பாடுகள் ஏற்படுவது ஏன்? என்று தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து ஆய்வு செய்து முரண்பாடுகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மேலும் 12 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை மொத்தம் 58 நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதிகளில் இதுவரை முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படாத நிலை நீடிக்கிறது. 
எனவே விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட மாவட்ட நிர்வாகம் உரிய கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story