புதுக்கோட்டை கலெக்டருடன் காணொலி மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை


புதுக்கோட்டை கலெக்டருடன் காணொலி மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 7 May 2021 8:20 PM GMT (Updated: 7 May 2021 8:20 PM GMT)

புதுக்கோட்டை கலெக்டருடன் காணொலி மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்

புதுக்கோட்டை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் உமா மகஸே்வரியிடம் கேட்டறிந்தார். மாவட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், சிகிச்சை மையங்கள், காய்ச்சல் முகாம்கள், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு, சிகிச்சைக்குரிய படுக்கைகளின் எண்ணிக்கை, தனியார் மருத்துவமனைகளில் உள்ள 50 சதவீத இருக்கைகள் விவரம், மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் கலெக்டருக்கு உரிய ஆலோசனைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எம்.சந்தோஷ்குமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, பொது சுகாதார துணை இயக்குனர்கள் கலைவாணி, விஜயக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story