முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


முதியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 May 2021 8:40 PM GMT (Updated: 7 May 2021 8:40 PM GMT)

முதியவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்(வயது 60). இவர் சம்பவத்தன்று தனது செல்போனை தொலைத்து விட்டார். இதையடுத்து அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (50), சக்திவேல் (23) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரிடம், செல்போனை எடுத்தீர்களா? என்று கோபால் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் உள்பட 3 பேரும், எங்களை எப்படி சந்தேகப்படலாம் என்று கேட்டு கோபாலை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கோபால் அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story