சிவகிரி அருகே பரபரப்பு பால்போல் வெள்ளையாக மாறிய கிணற்று தண்ணீர்; அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

சிவகிரி அருகே கிணற்று தண்ணீர் பால்போல் வெள்ளையாக மாறியதால் அதை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சிவகிரி
சிவகிரி அருகே கிணற்று தண்ணீர் பால்போல் வெள்ளையாக மாறியதால் அதை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கிணற்று தண்ணீர்
சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் கரட்டாங்காட்டுபுதூரை சேர்ந்தவர் தங்கமணி (வயது 51). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு உள்ளது. சுமார் 60 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் தற்போது 50 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இந்தநிலையில் தங்கமணி நேற்று வழக்கம்போல் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது கிணற்று தண்ணீர் முழுவதும் பால்போல் வெள்ளை நிறத்துக்கு மாறியிருந்தது தெரிய வந்தது.
துர்நாற்றம் இல்லை
இதனால் ஆச்சரியம் அடைந்த தங்கமணி பக்கத்து தோட்டத்து விவசாயிகள் சிலரிடம் இது குறித்து கூறினார். சிறிது நேரத்தில் அந்த பகுதி விவசாயிகள் அங்கு கூடினார்கள். அப்போது விஷமிகள் யாராவது கிணற்று தண்ணீரில் ரசாயனத்தை கலந்து விட்டார்களா? என்று சந்தேகித்து தண்ணீரை முகர்ந்து பார்த்தார்கள். ஆனால் தண்ணீரில் எந்த துர்நாற்றமும் அடிக்கவில்லை. நிறம் மட்டும் பால்போல் காணப்பட்டது. இதனால் தண்ணீரை குடித்து பார்த்தார்கள். ருசியும் மாறாமல் இருந்தது.
கோரிக்கை
இதனால் விவசாயிகள் இதுகுறித்து அஞ்சூர் ஊராட்சி தலைவரிடம் தகவல் தெரிவித்தார்கள். உடனே அவர் சம்பந்தப்பட்ட கிணற்றை வந்து பார்த்தார். பின்னர் இதுகுறித்து வருவாய் துறையினருக்கு தகவல் கூறியுள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட நீர்மேலாண்மை துறை அதிகாரிகள் இந்த கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Related Tags :
Next Story