பெண் என்ஜினீயர் தற்கொலை: கைதான காதலன் சிறையில் அடைப்பு


பெண் என்ஜினீயர் தற்கொலை: கைதான காதலன் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 8 May 2021 12:51 AM GMT (Updated: 2021-05-08T06:21:54+05:30)

பெண் என்ஜினீயர் தற்கொலை வழக்கில் கைதான காதலன் சிறையில் அடைக்கப்பட்டார்.

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள மொளசி பொய்யேரி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது 23). பள்ளிபாளையம் அருகே உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மணிகண்டனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 23 வயதான பெண் என்ஜினீயர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையே மணிகண்டன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த பெண் என்ஜினீயர் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மொளசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயம் மற்றும் போலீசார் காதலித்து பெண் என்ஜினீயரை ஏமாற்றியதாக மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின் பேரில் மணிகண்டன் ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story