ஊட்டி நகரில் சுகாதார பணிகள் தீவிரம்


ஊட்டி நகரில் சுகாதார பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 8 May 2021 2:07 PM GMT (Updated: 8 May 2021 2:26 PM GMT)

ஊட்டி நகரில் நகராட்சி ஊழியர்கள் சுகாதார பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க நகரில் குவிந்து வருகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதால், வெளியே தேவை இல்லாமல் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஊட்டி நகராட்சி மார்க்கெட், மணிக்கூண்டு, லோயர் பஜார் பகுதியில் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக நேற்று நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து பொதுமக்கள் அதிகம் பேர் நடந்து செல்லும் நடைபாதையில் பிளீச்சிங் பவுடர் போட்டு சுகாதார பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Next Story