கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன?


கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன
x
கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன
தினத்தந்தி 8 May 2021 3:14 PM GMT (Updated: 8 May 2021 3:14 PM GMT)

கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன?

கிணத்துக்கடவு


கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. 

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில்  இதுவரை 664 பேருக்கு  கொரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனாதொற்று அதிகரிப்பதற்கான காரணம் குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுவதாவது:-

கடைபிடிப்பதில்லை

கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி ஏராளமானோர்கொரோனா பரிசோதனை செய்து செல்கின்றனர். இந்த நபர்கள் பரிசோதனை முடிவு வரும் வரை தனிமையில் இருக்கவேண்டும் என பலமுறை அறிவுரை கூறியும் யாரும் இதை கடைபிடிப்பதில்லை. 

அதேபோல் கொரோனாதொற்றின் தன்மை  குறைவாக உள்ள நபர்களை வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தாலும், அந்த நபர்கள் வீட்டில் தனிமையில் இருப்பதில்லை.

 தனிமையில் இருக்கும் நபர்களிடம் அவருக்கு தேவையான உணவை சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோல் இந்த தொற்று ஏற்பட்ட நபர்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்துவிடுகின்றனர். 

அதிகரிப்பு

இதனால் மற்றவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஏற்கனவே கொரோனாதொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும் நபர்களுக்கு மருந்து,மாத்திரைகளை அவர்கள் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து வாங்கிச் சென்று வழங்க அறிவுரை வழங்கியும் சிலர் அதை மீறி கொரோனாநோயாளிகளே அரசு மருத்துவனைக்கும், வெளியேயும் நடமாடி வருவதால் தற்போது கிணத்துக்கடவு பகுதியில் பலருக்குகொரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. 

மேலும் கொரோனாதொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும்பலர் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று விடுவதால் தற்போது கொரோனாதொற்று அதிகரித்து வருகிறது.தற்போது கிணத்துக்கடவு பகுதியில் மட்டும் இதுவரை 664 பேருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டுள்ளது. 

கடும் நடவடிக்கை

தற்போது சுகாதாரத்துறை சார்பில் கொரோனாதொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நபர்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

அதை மீறி சில நபர்கள் வெளியில் நடமாடுவதாக தகவல்கிடைத்துள்ளது. அப்படிநடமாடுவது தெரிந்தால் அந்த நபர்கள் மீது போலீசில் புகார் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 


கிணத்துக்கடவு பகுதியில்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமை படுத்தப்பட்டு வீட்டில் இல்லாமல் வெளியில் நடமாடுவதால் கிணத்துக்கடவு பகுதியில்கொரோனாதொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாவட்டநிர்வாகம் கடும்நடவடிக்கைஎடுத்துகொரோனா தொற்றுபாதிக்கப்பட்டவர்களை தீவிரமாக கண்காணித்து வெளியே நடமாடுவதை தடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story