சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்


சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்
x
தினத்தந்தி 8 May 2021 3:16 PM GMT (Updated: 8 May 2021 3:16 PM GMT)

சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்

கோவை

முழு ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்தனர். ஆம்னி, தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இரவு நேர பஸ் போக்குவரத்து

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாளை (திங்கட் கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டு உள்ளது. இதனால் கோவையில் வசிக்கும் வெளிமாவட்ட தொழி லாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினரு டன் சொந்த ஊர் திரும்புகின்றனர். 

இதற்காக அவர்கள் கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் காலை முதல் குவிந்தனர். முழு ஊரடங்கு காரணமாக நேற்று மற்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நேர போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதனால் நேற்று காலை முதல் சிங்காநல்லூரில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று மாலையில் சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் பஸ் நிலையத்தில் குவிந்தனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது

அச்சம் வேண்டாம்

முழு ஊரடங்கால் கோவையில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்த வர்கள் சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதனால் நூற்றுக்கணக் கான பயணிகள் வெளியூர் செல்லும் பஸ் நிலையத்தில் குவிந்து வருகின்ற னர். எனவே தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க பஸ் நிலையங்க ளில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

விடுமுறையில் இருந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக முழு வீச்சில் அரசு பஸ்கள் இயக்கப்படும். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் கட்டணம் வசூல்

கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியதால் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கமாக நெல்லை செல்ல ஆம்னி பஸ்களில் இருக்கைக்கு ரூ.600-ம், படுக்கைக்கு ரூ.800-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். 

ஆனால் நேற்று படுக்கைக்கு ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்பட் டது. இதுதவிர மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் கட்ட ணத்தில் சிலர் வேன் உள்ளிட்ட வாகனங்களை இயக்கினர். இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர்.

வடமாநில தொழிலாளர்கள்

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்வது அதிகரித்து உள்ளது. இதற்காக கோவை ரெயில் நிலையத்தில் அவர்கள் நேற்று மாலை குவிந்தனர். வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில் வரும் வரை அவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் அமர்ந்திருந்தனர்.


Next Story