தேனி மாவட்டத்தில் மேலும் 3 பேரின் உயிரை பறித்த கொரோனா


தேனி மாவட்டத்தில் மேலும் 3 பேரின் உயிரை பறித்த கொரோனா
x
தினத்தந்தி 8 May 2021 3:57 PM GMT (Updated: 8 May 2021 3:57 PM GMT)

தேனி மாவட்டத்தில் மேலும் 3 பேரின் உயிரை கொரோனா பறித்தது. நேற்று ஒரேநாளில் 521 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

தேனி:
தேனி மாவட்டத்தில் மேலும் 3 பேரின் உயிரை கொரோனா பறித்தது. நேற்று ஒரேநாளில் 521 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 
கொரோனா பாதிப்பு
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. 
இந்தநிலையில் தேனி மாவட்ட கலெக்டரின் கார் டிரைவர், கலெக்டரின் முகாம் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 போலீசார், கூடலூரை சேர்ந்த வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆகியோர் உள்பட 521 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டத்தில் இதுவரை ஏற்பட்ட பாதிப்பில் இது புதிய உச்சம் ஆகும். இதனால் மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்து 239 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 376 பேர் நேற்று குணமடைந்தனர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து 431 பேர் மீண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 2 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
3 பேர் பலி
இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த 54 வயது ஆண், சின்னமனூரை சேர்ந்த 48 வயது பெண் ஆகிய 2 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். மேலும் அங்கு சிகிச்சை பெற்ற அன்னஞ்சியை சேர்ந்த 65 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார்.

Next Story