முகக்கவசம் அணியாதது குறித்து கேட்டதால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; வாலிபர் கைது


முகக்கவசம் அணியாதது குறித்து கேட்டதால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 May 2021 5:16 PM GMT (Updated: 2021-05-08T22:46:07+05:30)

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்; வாலிபர் கைது

பெங்களூரு:
பெங்களூரு வித்யாரண்யபுரா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஒருவர், சக போலீசாருடன் சேர்ந்து நேற்று முன்தினம் மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். 

அவரிடம், முகக்கவசம் அணியாமல் இருப்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டார். இதற்கு அந்த வாலிபர் சரியான பதில் சொல்லாதததுடன், சப்-இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே அந்த வாலிபர், சப்-இன்ஸ்பெக்டரை தாக்கினார். உடனே அங்கிருந்த போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தார்கள். விசாரணையில், அவரது பெயர் அக்‌ஷய் (வயது 26) என்று தெரிந்தது. அவர் மீது வித்யாரண்யபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story