ஏரல் அருகே பரிதாபம்; கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி சாவு


ஏரல் அருகே பரிதாபம்; கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி சாவு
x
தினத்தந்தி 8 May 2021 11:14 PM IST (Updated: 8 May 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்தார்.

ஏரல், மே:
ஏரல் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அவரது மனைவியும் பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

ஏரல் அருகே உள்ள கணபதிசமுத்திரம் ஊரைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 63). விவசாயி. இவரது மனைவி இரட்டை முத்துப்பேச்சி (60). இவர்களுக்கு கார்த்திகா (24) என்ற மகள் உள்ளாா். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்தநிைலயில் காமராஜ் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தாா். அதற்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்று வந்தார்.

பரிதாப சாவு

இதற்கிடையே நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் காமராஜ் பரிதாபமாக இறந்தார். இதைக் கேள்விப்பட்ட அவரது மனைவி இரட்டை முத்துப்பேச்சி அதிர்ச்சி அடைந்து வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தார்.
இந்த நிலையில் துக்கம் தாங்காமல் இரவு 8 மணிக்கு இரட்டை முத்துப்பேச்சியும் திடீரென பரிதாபமாக இறந்தார். இதனால் அந்த ஊரில் பரபரப்பு ஏற்பட்டது. சாவிலும் இணை பிரியாத தம்பதி கண்டு ஊர் மக்கள் வியந்தனர். இருவரின் உடல்களும் கணபதி சமுத்திரத்தில் நேற்று மதியம் அடக்கம் செய்யப்பட்டது.
1 More update

Next Story