மானாமதுரையில் அடிக்கடி மின்வெட்டு


மானாமதுரையில் அடிக்கடி மின்வெட்டு
x
தினத்தந்தி 8 May 2021 5:46 PM GMT (Updated: 8 May 2021 5:46 PM GMT)

மானாமதுரையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மானாமதுரை, 
மானாமதுரை மற்றும் சுற்றியுள்ள கிராம புற பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் வீடுகளில் பயன்படுத்தபடும்  மிக்சி, கிரைணடர், இன்வெட்டர் ஆகியவை பழுதாகின்றன. இதுகுறித்து மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மின் வெட்டு பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் இதுபோன்று அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story