மொபட் திருடியவர் பிடிபட்டார்


மொபட் திருடியவர் பிடிபட்டார்
x

மொபட் திருடியவர் பிடிபட்டார்

காரைக்குடி, 
காரைக்குடி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அசோக். இவர் தனது மொபட்டில் அவரது நண்பர் கார்த்திக் என்பவரை ஏற்றிக்கொண்டு முடியரசனார் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனை அருகே உள்ள டீக்கடையில் மொபட்டை நிறுத்திவிட்டு இருவரும் மருத்துவமனைக்குச் சென்று திரும்பி வந்தனர். அப்போது அவர்கள் நிறுத்திச்சென்ற மொபட்டை காணவில்லை. அப்போது டி.டி. நகர் சர்ச் அருகே ஒருவர் அசோக்கின் மொபட்டை ஒருவர் தள்ளிக் கொண்டு சென்றதை கண்டனர். உடனே அவரை கையும் களவுமாக பிடித்து காரைக்குடி வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தேவகோட்டை அருகே உள்ள செலுகையை சேர்ந்த குணசேகரன் (வயது 58) என்பது தெரியவந்தது. வடக்கு போலீசார் மொபட்டினை பறிமுதல் செய்து குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story