வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து என்ஜினீயர் பலி


வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 8 May 2021 7:44 PM GMT (Updated: 2021-05-09T01:14:37+05:30)

வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து என்ஜினீயர் பலியானார்.

வள்ளியூர்:

வள்ளியூர் தெற்கு ரதவீதியை சேர்ந்த சக்திவேல் மகன் மனோலின் ரோஜர் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இவரது வீடு பழமையாக இருந்ததால் அதனை புதுப்பிக்க முடிவு செய்து வேலை நடந்து வருகிறது. இதனை மனோலின் ரோஜர் மேற்பார்வை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுவர் இடிக்கும் பணியினை மனோலின் ரோஜர் அருகிலுள்ள சிலாப் மீது நின்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலாப் இடிந்து கீழே விழுந்தது. இதில் மனோலின் ரோஜர் பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மனோலின் ரோஜர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story