தென்காசியில் அனைத்து கடைகளும் திறப்பு பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்


தென்காசியில் அனைத்து கடைகளும் திறப்பு  பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 8 May 2021 8:06 PM GMT (Updated: 2021-05-09T01:36:25+05:30)

தென்காசியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

தென்காசி:

கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில் தமிழக அரசு நேற்று புதிய கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்தது.

ஏற்கனவே இரவு நேரம் மற்றும் வார இறுதி நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தவும், பகல் 12 மணிவரை மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறந்து வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து கடைகளும் திறக்கலாம் என அரசு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று தென்காசியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. பலசரக்கு கடை, மளிகை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். தற்போது பண்டிகை காலம் என்பதால் பலர் ஜவுளி எடுக்க கடைகளில் குவிந்தனர். திருமணங்களும் நடைபெற உள்ளதால் நகை கடைகளிலும் பொதுமக்கள் நகைகளை வாங்கிச் சென்றனர். 

சாலையோர கடைகளிலும் பொதுமக்கள் பழங்கள் போன்ற உணவு பொருட்களை வாங்கி சென்றனர். வாகன போக்குவரத்து நகரின் உட்புறமும் வெளிப்புறமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Next Story