முழு ஊரடங்கையொட்டி சென்னையில் 200 மின்சார ரெயில் சேவை குறைப்பு
முழு ஊரடங்கையொட்டி சென்னையில் மின்சார ரெயில் சேவையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் தினமும் 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், நாளை (திங்கட்கிழமை) முதல், முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மின்சார ரெயில் சேவையை குறைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் ஏற்கனவே 480 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. இதில் அத்தியாவசிய பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும். இதனால் 200 மின்சார ரெயில் சேவைகள் வரை குறைக்கப்படும். காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் அதிகளவில் மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மின்சார ரெயில்சேவை குறைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story