முன்விரோதத்தில் 2 பேருக்கு அடி-உதை; 4 பேர் கைது


முன்விரோதத்தில் 2 பேருக்கு அடி-உதை; 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 May 2021 5:26 AM IST (Updated: 9 May 2021 5:26 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் பெரும்பாக்கத்தை , முன்விரோதத்தில் 2 பேருக்கு அடி-உதை 4 பேர் கைது செய்தனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி பிரியா (வயது 36) என்பவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த பெரும்பாக்கம் பூஞ்சோலை நகரை சேர்ந்த கார்த்திக் (30), கதிரவன் (28), கலையரசன் (26), பவுன் (27) ஆகிய 4 பேரும் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தில் பிரியாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

அதை கேட்ட அவரது உறவினரான சக்கரவர்த்தியையும் மேற்கண்ட நான்கு பேரும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பிரியா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து கார்த்திக், கதிரவன், கலையரசன், பவுன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கம்மவார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனனர். அப்போது அங்கு ராஜேஷ்(வயது 28), பத்மநாபன் (40), ராகுல் (22) பார்த்திபன் (24) ஆகிய 4 பேரும் பொது இடத்தில் நின்று ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதை கருதிய போலீசார் மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story