திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு
திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரை அடுத்த தேங்காய்ஜிட்டி குருமன்ஸ் வட்டம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரவேலு (வயது 30). இவரின் மனைவி விஜி (25). சுந்தரவேலு ஓசூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவரின் மனைவிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதனால் விஜி வீட்டை பூட்டி விட்டு விஷமங்கலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு ெசன்று தங்கி உள்ளார்.
அவரின் வீட்டுக்கு வந்த மர்மநபர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவின் பூட்டை உடைத்து, அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.50, 2 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார்.
ஓசூரில் இருந்து ஊருக்கு வந்த சுந்தரவேலு வீட்டுக் கதவு, பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பணம், நகை திருட்டுப் போனது குறித்து கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story