சென்னை கிண்டியில் மாங்காய் பறித்தபோது மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி


சென்னை கிண்டியில் மாங்காய் பறித்தபோது மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி
x
தினத்தந்தி 10 May 2021 5:32 PM IST (Updated: 10 May 2021 5:32 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கிண்டியில் மாங்காய் பறித்தபோது மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தார்.

சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் கங்கையம்மன் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் மதன் (வயது 11). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். மதன், தனது நண்பர்களுடன் ஈக்காட்டுத்தாங்கல் மாந்தோப்பு பகுதியில் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது மாந்தோப்பில் உள்ள சுற்றுச்சுவர் மீது ஏறி, மரத்தில் இருந்த மாங்காயை பறிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த மின்சார ‘டிரான்ஸ்பார்மரில்’ எதிர்பாராதவிதமாக அவரது கை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மதன், சம்பவ இடத்திலேயே 
பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கிண்டி போலீசார், பலியான மதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story