ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு நர்சு உயிரிழப்பு


ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு நர்சு உயிரிழப்பு
x
தினத்தந்தி 11 May 2021 10:43 AM IST (Updated: 11 May 2021 10:43 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு நர்சு உயிரிழப்பு.

சென்னை, 

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி (வயது 50). இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த ஆண்டு முதல் கொரோனா தடுப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறியுடன் காணப்பட்ட அவர், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 3-ந் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சாமுண்டீஸ்வரி உயிரிழந்தார். நேற்று முன்தினம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நர்சு ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், நேற்று மற்றொரு நர்சு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story