மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: தாம்பரம் நகராட்சி ஒப்பந்ததாரர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: தாம்பரம் நகராட்சி ஒப்பந்ததாரர் பலி
x
தினத்தந்தி 11 May 2021 3:19 PM IST (Updated: 11 May 2021 3:19 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் மோகன்பாபு (வயது 25). இவர், தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்தார்.

இவர், மாமல்லபுரம் அருகே மணமையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் உறவினர் கலைவாணன் (22) என்பவருடன் தாம்பரத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.மணமை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது, புதுச்சேரி நோக்கி அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று இவர்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோகன்பாபு தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.அவரது உறவினரான கலைவாணன் படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story