திருவல்லிக்கேணியில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை


திருவல்லிக்கேணியில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2021 3:27 PM IST (Updated: 11 May 2021 3:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னை திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 30). இவர், தமிழக போலீஸ் துறையில் ஆயுதப்படை 2-ம் நிலை போலீசாக பணி செய்து வந்தார்.

சென்னை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இவர், பின்னர் மீண்டும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடந்த மார்ச் மாதம் முதல் மருத்துவ விடுப்பில் இருந்தவர், விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. இந்தநிலையில் தனது வீட்டு படுக்கை அறைக்கு நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்றவர், நேற்று காலை 7.30 மணிவரை கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போதுதான் கமலக்கண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த ஐஸ்அவுஸ் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கமலக்கண்ணன் பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story