நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தீ விபத்து
சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள எல்டோரடோ கட்டிடத்தில் 6-வது மாடியில் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து நேற்று அதிகாலை திடீரென தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த எழும்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், 6-வது மாடியில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை, ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.இந்த விபத்தில் நிறுவனத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story