காஞ்சீபுரம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காஞ்சீபுரம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 May 2021 11:21 AM IST (Updated: 12 May 2021 11:21 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளை கேட் பாலாஜி நகரை சேர்ந்தவர் தயாளன் இவரது மனைவி லதா (வயது 38). தயாளன் ஏற்கனவே இறந்துவிட்டார். லதா வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாததால் லதா கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் மனம் உடைந்த லதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த லதாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். லதா தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story