காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தின விழா


காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உலக செவிலியர் தின விழா
x
தினத்தந்தி 13 May 2021 3:27 PM IST (Updated: 13 May 2021 3:27 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக செவிலியர் சேவையின் முன்னோடி மங்கை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) குருநாதன் தம்பையா தலைமை தாங்கினார். அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கல்பனா பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்கள், செவிலியர்களின் 
கண்காணிப்பாளர்கள் மற்றும் செவிலியர்கள் பலரும் ஒவ்வொருவராக வரிசையில் வந்து உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

Next Story